பெத்தநாயக்கன்பாளையம் விநாயகர் கோவிலில் 35ம் ஆண்டு நிறைவு விழா
ADDED :3117 days ago
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கொட்டவாடி, விநாயகர் கோவிலில், 35ம் ஆண்டு நிறைவு விழா, நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு, கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8:30 மணிக்கு சக்தி அழைத்தல், 10:30க்கு ஹோம பூஜை, 11:30க்கு மகா கணபதிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதி உலா வந்தார். நேற்று காலை, 10:00 மணிக்கு அபிஷேகம், மதியம், 1:00 மணிக்கு ஊரணி பொங்கல், மாவிளக்கு தட்டுடன் ஊர்வலம் நடந்தது. இன்று, மஞ்சள் நீராட்டுடன், விழா நிறைவடைகிறது.