திருவள்ளூர் குரு பகவானுக்கு பாலாபிஷேகம்
ADDED :3176 days ago
திருவள்ளூர் : திருவள்ளூர், தட்சிணாமூர்த்தி கோவில்களில், நேற்று, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. திருவள்ளூர், யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், குரு
பகவானுக்கு உகந்த நாளான நேற்று, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு, மலர் அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. திருப்பாச்சூர், தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு, நேற்று மாலை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் அலங்காரம் நடந்தது. இதில், திருவள்ளூர், காக்களூர், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.