சின்னாளபட்டியில் சமயபுரத்து மாரியம்மன் கோயில் திருவிழா
ADDED :3178 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் சமயபுரத்து மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. பிருந்தாவன தோப்பில் இருந்து அம்மன் அழைப்புடன் துவங்கிய விழாவில், மூலவர், பரிவார
தெய்வங்களான கருப்பணசாமி, பாண்டிசாமி, எல்லைகாத்த அம்மன், நாகாத்தம்மன், சப்த கன்னியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தல், அக்னிச்சட்டி எடுத்தல், கரும்புத்தொட்டில் குழந்தை ஊர்வலம் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.