உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் தேரோட்டம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் தேரோட்டம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கோவிந்தராஜ பெருமாள் தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. திருப்பதியின் ஏற்றம் கொண்ட கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், சித்திரை திருவிழா கடந்த 1 ம் தேதி துவங்கியது. பத்து நாட்கள் பெருமாள் தாயார் வீதியுலா உற்சவம் நடத்தினர்.   தேர் திருவிழாவையொட்டி நேற்று காலை சுப்ரபாத சேவை, விஸ்வரூப தரிசனம், பெருமாள் தாயார் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. தேரில் ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள் எழுந்தருள செய்தனர். காலை 10.30 மணிக்கு தேரோடும் வீதிகளின் வழியாக பக்தர்கள் தேரினை வடம் பிடித்து, இழுத்து சென்றனர். ராமனுஜ பக்தர்கள் நாம சங்கீர்த்தன பஜனை பாடி சென்றனர். பாரத சேவா குழுவினர் மோர் தானம் வழங்கினர்.  தொடர்ந்து இன்று காலை தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. விழாவையொட்டி டி.எஸ்.பி., குப்புசாமி, இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !