உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம்

திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம்

திருக்கனுார்: திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர், வக்ரகாளியம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி ஜோதி தரிசனம் நேற்று நடந்தது. திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான திருவக்கரை கிராமத்தில் பழமை வாய்ந்த சந்திரமவுலீஸ்வரர், வக்ர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பவுர்ணமி, அமாவாசை நாளில் ஜோதி தரிசனம் நடந்து வருகிறது. சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு, நேற்றிரவு 12.00 மணி அளவில் ஜோதி தரிசனம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கோவில் நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !