காளையார்கோயில் புனித மூவரசர்கள் தேர் பவனி
ADDED :3118 days ago
காளையார்கோயில், பள்ளித்தம்மம் கிராமத்தில் புனித மூவரசர்கள் திருவிழா ,மே 1 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் நவநாள் திருப்பலி நடைபெற்றுவந்தது. நேற்று முன்தினம் இரவு புனித மூவரசர்கள் ஆலயத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். புனித கஸ்பார், புனித மெல்கியூர், புனித பல்த்தசார் ஆகியோர் ,முக்கிய வீதிகளில் தேர்பவனி நடைபெற்றது. திருச்சி மறைமாவட்ட முன்னாள் அதிபர் சேசு தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. நேற்று மாலையில் கொடி இறக்கம் செய்து , விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்துவந்தனர்.