உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவபெருமான் வேடமணிந்து வலை வீசிய காட்சிப்படலம்

சிவபெருமான் வேடமணிந்து வலை வீசிய காட்சிப்படலம்

சாயல்குடி, சாயல்குடி அருகே மாரியூர் பவளநிறவள்ளியம்மன் சமேத பூவேந்திய நாதர் கோயில் பழமையான புராதன சிறப்பினை பெற்றதாகும். ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் கடந்த மே 1 அன்று திங்கள்கிழமை கோயிலின் முன்புறம் கொடியேற்றம் நடந்தது. கடந்த 10 நாட்களும் காலை, மாலை நேரங்களில் சுவாமி புறப்பாடு, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு மாரியூர் கடலுக்குள் நாட்டுப்படகில், சிவபெருமான் வேடமணிந்த குருக்கள் வலைவீசி, (பொம்மை) பெரிய சுறாமீனை பிடித்தார். பின்னர் 9:30 மணியளவில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அலங்கார பந்தலில் திருக்கல்யாணம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !