சென்னிமலை கோவில்களில் சித்ரா பவுர்ணமி கோலாகலம்
சென்னிமலை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சென்னிமலை சுற்றுவட்டார கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. சென்னிமலை அருகே, சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் மடவிளாகம் சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலுக்கு வந்தனர். அங்கு அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் நடந்தது. இறுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
*எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவில் மற்றும் மேற்கு புதுப்பாளையம் சோளியம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் கொடுமுடி சென்று காவிரி தீர்த்தம் எடுத்து வந்தனர். இரவு, 7:00 மணிக்கு மாரியம்மனுக்கு சந்தனம் மற்றும் தீர்த்த அபிஷேகம், தீப அலங்கார ஆராதனை நடந்தது. இதேபோல் சென்னிமலை பகுதியில் பல்வேறு கோவில்களில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
*முருங்கத்தொழுவு மணிமலை கருப்பணசுவாமி கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
*சென்னிமலை முருகன் கோவிலில் சித்திரை பவுர்ணமி கிரிவலம் சிறப்பாக நடந்தது. அதிகாலை, 7:00 மணிக்கு ஊத்துக்குளி சாலை பிரிவில் உள்ள மேற்கு தண்ணீர்பந்தல் பழனிஆண்டவர்க்கு அபிஷேகபூஜை நடந்தது. மலை அடிவாரத்தில் மாலை, 5:20 மணியளவில், முருகனின் சக்திவேலுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து, 5:40 மணியளவில், கிரிவலம் தொடங்கியது. இரவு, 7:00 மணியளவில், கிரிவலப்பாதையில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு முழுவதும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரினனம் செய்தனர்.