உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பம் பராமரிக்க கோரிக்கை

கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பம் பராமரிக்க கோரிக்கை

ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்துார் கதலிநரசிங்கபெருமாள் கோயில் தெப்பத்தை சீரமைக்கவும், தெப்பத்தில்குவியும் குப்பையை அப்புறப்படுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இக்கோயில் பிற்கால பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட புரதானக்கோயிலாகும். மழைக்காலத்தில் இப்பகுதி சிற்றோடைகள் மூலம் வரும் நீர் தெப்பத்தில் தேங்கும் படியாக வடிவமைக்கப் பட்டுள்ளது. கடந்த பலமாதங்களாக தெப்பம் வறண்டதால் இப்பகுதி நிலத்தடி நீர் பாதிப்படைந்து கிணறுகள், போர்வெல் களில் நீர் சுரப்பு குறைந்தது. சமீபத்தில் பெய்த கோடை மழையால் தெப்பத்தில் தற்போது தண்ணீர் தேங்கி வருகிறது. கோயிலுக்கான தெப்பம் மற்றும் படிக்கட்டுகள் பல இடங்களில் சரிந்து சேதமடைந்து வருகிறது. பராமரிப்பில்லாத தெப்பத்தில் குப்பை சேர்ந்துதேங்கும் மழைநீரின் தன்மையை பாதிப்படையச்செய்கிறது. கோயில் தெப்பத்தை சீரமைக்கவும்,தேங்கியுள்ள குப்பையை அப்புறப்படுத்தவும் கோயில் நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம், தன்னார்வஅமைப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !