உடுமலையில் குழந்தைகளுக்கு சமஷ்டி உபநயனம்
ADDED :3070 days ago
உடுமலை: உடுமலையில், பிராமண மகா சங்கம் சார்பில், சமஷ்டி உபநயனம் நிகழ்ச்சி, ராமய்யர் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், வைதீக முறைப்படி, குழந்தைகளுக்கு, சமஷ்டி உபநயனம் செய்யப்பட்டது. ஏராளமானோர் குழந்தைகளை வாழ்த்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, உடுமலை பிராமண மகா சங்கத்தலைவர் சங்கரன், செயலாளர் பாலாஜி விஸ்வநாத், பொருளாளர் ஜெயச்சந்திரன், உபதலைவர் நடராஜன், உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.