காசிவிஸ்வநாதர் கோவிலில் மழை வேண்டி யாகம்
ADDED :3082 days ago
தம்மம்பட்டி: ஆத்தூர் அடுத்த, தம்மம்பட்டி காசிவிஸ்வநாதர் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், நேற்று சிறப்பு யாகம் நடந்தது. அதில், மழை வேண்டி ருத்ர ஜெபம் செய்து, காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணிவரை யாகம் நடந்தது. மேலும், மழை பெய்ய, ஏழாம் திருமுறைப் பாடல்களை, சிவாச்சாரியார்கள் பாடினர். தொடர்ந்து, யாகத்தில் வைக்கப்பட்டிருந்த கலச தீர்த்தங்கள் கொண்டு, நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. இதில், இந்து சமய அறநிலைய செயல் அலுவலர் அழகுலிங்கேஸ்வரி, தக்கார் சாந்தி, தம்மம்பட்டி பேரூராட்சி முன்னாள் சேர்மன் பாலசுப்ரமணியம் உள்பட மக்கள் பலர் பங்கேற்றனர்.