உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னம்பாக்கம் விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா

அன்னம்பாக்கம் விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா

திண்டிவனம்: அன்னம்பாக்கம் சித்தி விநாயகர் கோவிலில், மண்டல அபிஷேக நிறைவு விழா நடந்தது. திண்டிவனம் அடுத்த அன்னம்பாக்கம் கிராமத்தில் உள்ள இந்திரா நகரில் சித்தி விநாயகர், முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 30ம் தேதி நடந்தது. விழாவையொட்டி, தினந்தோறும், மண்டல அபிஷேக விழா நடந்து வந்தது. மண்டல அபிஷேகத்தின் நிறைவு விழாவையொட்டி, காலை லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கணபதி ஹோமங்கள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !