நெல்லிக்குப்பம் புற்றுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3093 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஜீவாநகர் புற்றுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. நெல்லிக்குப்பம் ஜீவா நகர் புற்றுமாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. மே மாதம் 31 ஆம் தேதி கணபதி ேஹாமம் கோ பூஜை யாகசாலை பூஜைகள் நடந்தது. இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும் பூர்ணாஹீதி தீபாரதனையும் காலை 10 மணிக்கு கடம் புறப்பாடாகி கும்பாபிஷேகம் நடந்தது. சுப்ரமணிய சிவம் குருக்கள் தலைமையில் பூஜைகள் செய்தனர். இ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலை துணைத்தலைவர் பாலாஜி முன்னாள் கவுன்சிலர் சீனுவாசன் விழாக்குழு கிருஷ்ணமூர்த்தி, பலராமன், தனுசு, புகழேந்தி, பிரபாகரன், செந்தில்குமார்,சக்திவேல் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இரவு அம்மன் வீதிஉலா நடந்தது.