விருத்தாசலம் வேத விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :5157 days ago
கடலூர் : விருத்தாசலம் வேத விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விருத்தாசலம் இரட்டை தெருவில் உள்ள வேத விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழா கடந்த 11ம் தேதி கணபதி, சக்தி, நவக்கிரகம் ஹோமங்களுடன் துவங்கியது. கடந்த 12ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6.00 மணிக்கு நான்காம் கால பூஜை, 8.00 மணிக்கு மஹா பூர்ணாகுதி தீபாராதனை, 8.30 மணிக்கு கலசம் புறப்பாடு நடந்தது. 9 மணிக்கு மூலவருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.