திருநள்ளார் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
ADDED :3159 days ago
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரம்மோற்சவ விழாவில், நேற்று நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர். காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா, 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக, நேற்று தேரோட்டம் நடந்தது. இதில், செண்பக தியாகராஜர், நிலோத்தம்பாள், விநாயகர், முருகர், சண்டி கேஸ்வரர் ஆகிய சுவாமிகள் ஐந்து தேர்களில் எழுந்தருளி, பவனி வந்தனர்.