உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்தூர் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்

முதுகுளத்தூர் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே தட்டான்குடியிருப்பு பாமா, ருக்மணி, கிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சசாந்தி, யஜமானர் சங்கல்பம், ஆச்சார்ய ரித்விக் வர்ணம், மிருத் ஸங்க்ரஹரணம், கும்ப ஆதாரதனம், புண்யாக வசனம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், அக்னி பிரதிஷ்டை, ஹோமங்கள், திவ்ய பிரபந்த துவக்கம், சயனாதி வாசம், கோபூஜை, சூர்ய நமஸ்காரம், வேத பாராயணம், ஆறு கால யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மஹா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடம்புறப்பாட்டுக்கு பின், பாமா, ருக்மணி, ஸ்ரீகிருஷ்ணர் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றபட்டு,
கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகத்திற்கு பின் மூலவர் திருமஞ்சனம், திருக்கல்யாண உற்சவம், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கும்பாபிஷேகத்திற்கு த.மா.கா., மேற்கு மாவட்ட தலைவர்
ரங்கநாதன் தலைமை வகித்தார். சாத்தனூர் முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வம், கிராம தலைவர் முனியசாமி, செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் குருந்தையா உட்பட கிராமத்தினர் பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம்
வழங்கபட்டது.

இதேபோல் முதுகுளத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகன், வள்ளி, தெய்வானை உட்பட கோயில் பரிவார சிலைகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை குருநாதர்
ரவிச்சந்திரன், துணை குருநாதர் ரவீந்திரன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !