உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பராசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பராசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சாத்துார்: ஏழாயிரம்பண்ணை நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபராசக்திமாரியம்மன் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம்  நேற்று காலை நடந்தது.

ஸ்ரீபராசக்திமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை 7:41 மணிக்கு துவங்கி 8:40 மணி வரை நடந்தது. கோபுர கலசம்,  சுவாமி சன்னதிகளுக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க புனிதநீரால் அபிஷேகம் செய்தனர். பின்னர் ஸ்ரீபராசக்திமாரியம்மன்,  பைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. ஏழாயிரம்பண்ணை நாடார் மகமை மேல்நிலைப்பள்ளி, மற்றும்  துவக்கப் பள்ளியில் சென்னை  ஸ்ரீமுருகன்பெயின்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் சார்பில் கோயிலுக்கு வந்த 15 ஆயிரம்  பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் கோவை சீனிவாசா டிரேடர்ஸ் உரிமையாளர்  ஜி.காளியப்பநாடார், தொழிலதிபர்கள் கே.எம்.முரளி, எம்.ரவிச்சந்திரன், எம்.சிவக்குமார், எம்.கனகராஜ் நாடார் மற்றும் சங்கத் தலைவர்  கே.வி.டி.ஆறுமுகச்சாமி, பள்ளித்தாளாளர் கண்ணன், செயலாளர் ஏ.எம்.பாண்டியராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !