கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா
ADDED :3377 days ago
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் வைகாசி பெருவிழாவில் தெருவடைச்சானில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழா கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்து வருகிறது. ஐந்தாம் நாள் விழாவான நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 5:30 மணிக்கு அதிகார நந்தி கோபுர தரிசனம் நடந்தது. மாலை 4:30 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், மண்டகப்படி பூஜை, இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் மண்டகப்படி, 10:00 மணிக்கு மகாமேரு தெருவடைச்சானில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.