உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாரூர் அருகே ஆற்றில் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூர் அருகே ஆற்றில் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூர்: திருவாரூர் அருகே, வெட்டாற்றில், கருங்கல் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருவாரூர் அருகே, எட்டியலுார் கிராமத்தில் வெட்டாறு ஓடுகிறது. அக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் நேற்று ஆற்றுக்கு சென்றுள்ளனர். அங்கு, மதகு ஒன்றின் அருகில், கருங்கல்லால் ஆன, மூன்று சுவாமி சிலைகள் கிடப்பதை பார்த்துள்ளனர்.அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். எட்டியலுார் விரைந்த தாசில்தார் மற்றும் வருவாய் துறையினர், சுவாமி சிலைகளை கைப்பற்றினர். மூன்று கற்சிலைகளான, 1 அடி உயர பிரம்மன், 2 அடி உயர தட்சிணாமூர்த்தி, 1 அடி உயர மகாவிஷ்ணு ஆகியவை, திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள சிலைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !