அவலூர்பேட்டை மேலச்சேரியில் சிறப்பு வழிபாடு
ADDED :3053 days ago
அவலூர்பேட்டை: மேலச்சேரியில், குலதெய்வ சிறப்பு வழிபாடு நடந்தது. மேல்மலையனூர் தாலுகா, மேலச்சேரி கிராமத்தில் கன்னிமார், அம்மச்சார், பெரியாயி அம்மனுக்கு குல தெய்வ
வழிபாடு நடந்தது. விழாவை முன்னிட்டு அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, முப்பூஜைகளும் நடந்தது. இயற்கை வளம் , மழை வளம் வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில்
திரளான மக்கள் கலந்துக் கொண்டனர்.