உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்).. பொன் பொருள் சேரும்

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்).. பொன் பொருள் சேரும்

கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கடக ராசி அன்பர்களே!

பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. முக்கிய முடிவுகளை தீர சிந்தித்த  பிறகே செயல்படுத்துவது நல்லது. இருப்பினும் குருவின் 5, 7, 9-ம் இடத்துப் பார்வைகள் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம்.  5-ம் இடத்துப் பார்வையால் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும்.

பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவை குறையின்றி நிறைவேறும். பணியாளர்களுக்கு உயர்வை தருவார். 7ம் இடத்துப் பார்வையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். 9ம் இடத்துப் பார்வையால் குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.

பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். கணவன், -மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஜூன் 26-க்கு பிறகு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சுப நிகழ்ச்சிகள் கைகூட கால தாமதம் ஏற்படலாம்.  ஜூன் 24, 25 -ல் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.  ஜூன் 22, 23 ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் உண்டாகும். ஜூலை 3, 4-ல் அவர்கள் வகையில்  கருத்துவேறுபாடு ஏற்படலாம்.  சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூன் 30, ஜூலை 1, 2- ல் புத்தாடை,-அணிகலன்கள் வாங்கலாம். அடிக்கடி விருந்து, விழா சென்று வர வாய்ப்புண்டாகும்.உடல்நிலை சுமாராக இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால், முயற்சிக்கேற்ப வளர்ச்சி இல்லாமல் போகாது.  தொழில் விஷயமாக யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். ஜூலை 13-க்கு பிறகு மறைமுக எதிரிகளால் பிரச்னை உருவாகலாம். ஜூன் 24,25, 28,29- ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம்.  ஜூலை 5, 6, 7-ல் எதிர்பாராமல் வருமானம் கிடைக்கும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு குறுக்கிட்டாலும் திறம்பட சமாளிப்பர். அதிகாரிகளின்  ஆதரவு சீராக இருக்கும்.  மாத பிற்பகுதியில் அரசு ஊழியர்கள் வேலையில் கவனமுடன் இருக்கவும். யாரிடமும் வாக்குவாத்தில் ஈடுபட வேண்டாம்.  ஜூன் 20, 21ல் சிறப்பான நன்மையை எதிர்பார்க்கலாம்.

கலைஞர்கள் சீரான வளர்ச்சி காண்பர். எதிர்பார்த்த  புகழ், பாராட்டு போன்றவை கிடைப்பது அரிது.  சக பெண் கலைஞர்களிடம் விலகியிருப்பது நல்லது. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதமாகலாம். தொண்டர்களின் நலனுக்காக பணம் அதிகம் செலவழியும். தலைமையின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பது நல்லது.

மாணவர்கள் ஆசிரியர்களிடம் அறிவுரையை பின்பற்றி நடப்பது நல்லது.  புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் படிப்பில் கூடுதல் கவனம் தேவை.

விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவிருக்காது. ஊடுபயிர் சாகுபடி மூலம் ஆதாயம் காண்பர். கால்நடை  வளர்ப்பின் மூலம் அதிக வருவாயை எதிர்பார்க்கலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். வழக்கு, விவகாரத்தில்  மெத்தனமாக இருக்க வேண்டாம். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

பெண்கள் குடும்ப வாழ்வில் குதூகலம் காண்பர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டு. ஜூலை 10, 11ல் ஆடம்பர பொருள் வாங்கலாம்.

ஜூன்28- க்கு பிறகு பொருள் இழப்பு ஏற்படலாம். பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசிப்பர். பணிக்குச் செல்லும் பெண்கள் பணிச்சுமையைச் சந்தித்தாலும், அதற்குரிய வருமானம் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் புரியும் பெண்கள் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் காண்பர். தொழில் ரீதியான பயணம் வெற்றி பெறும். பெற்றோர் வீட்டில் சீதனம் கிடைக்கப் பெறலாம்.

நல்ல நாள்: ஜூன் 20, 21, 22, 23 26, 27, 30
ஜூலை 1,2,8,9,10,11
கவன நாள்: ஜூன்15, 16 ஜூலை 12, 13, 14
அதிர்ஷ்ட எண்:1,5  நிறம்:  வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்
* சனிக்கிழமை பெருமாளுக்கு துளசி அர்ச்சனை
* செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம்
* பவுர்ணமியன்று அம்மன் கோவில் வழிபாடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !