மறைமலைநகர் மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்கு இசை நிகழ்ச்சி
ADDED :3148 days ago
மறைமலைநகர் : தைலாவரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், உலக அமைதி வேண்டி, இசை நிகழ்ச்சி நடந்தது.
காட்டாங்கொளத்தூர் அடுத்த நின்னைக்காரையைச் சேர்ந்த, இசையரசு சம்பந்தன் என்பவர், தெய்வத்தமிழ் இன்னிசைக் குழு என்ற இசைக்குழு வைத்துள்ளார். மாதந்தோறும், உலக நன்மை வேண்டி, இறைவனை இசையால் மகிழ்விக்கின்றனர் இக்குழுவினர். அந்த வகையில், இவர்களின், 189வது இசை நிகழ்ச்சி, மறைமலைநகர் அடுத்த தைலாவரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடந்தது. இவர்களின் வழிபாட்டு பாடல்களைக் கேட்க, பகுதிவாசிகள் திரண்டு வந்திருந்தனர்.