உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டாளம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

பட்டாளம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் பட்டாளம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா நடந்தது. பெரியநாயக்கன் பாளையம்  விவேகானந்தபுரத்தில் உள்ள ப ட்டாளம்மன் கோவிலில் பூசாட்டு விழாவையொட்டி பூக்கம்பம் நடுதல், அம்மன் அழைப்பு, மதுரை வீரன்,  வெள்ளையம்மா, பொம்மியம்மா, பட்டாளம்மன் உருவாரங்கள் எடுத்து வருதல், அம்மன் திருக்கல்யாணம் ஆகியன நடந்தன. விழாவின்  முக்கிய நிகழ்வான, பெரியநாயக்கன்பாளையம் சந்தை பேட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகங்கள் மேளதாளங்களுடன்  ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. மாலையில், அக்னி கரகங்களுடன் மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, மஞ்சள்  நீராட்டு விழாவையொட்டி, பட்டாளம்மன் வெள்ளைக் குதிரையில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு  அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !