வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :3082 days ago
சூரமங்கலம்: சேலம், காமிநாயக்கன்பட்டியில், புதிதாக கட்டப்பட்டுள்ள வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு, நேற்று காலை, 4:30 முதல், 9:00 மணி வரை, மஹா கணபதி ஹோமம், அனுக்ஞை, தனபூஜை, வாஸ்து பூஜை ஆகியவை நடந்தது. தொடர்ந்து, கருத்தாங்கிணறு பகுதியில் தொடங்கிய தீர்த்தக்குட ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக, கோவிலை வந்தடைந்தனர். இதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். மாலை, 5:00 மணிக்கு வெக்காளி அம்மனுக்கு, சிறப்பு பூஜை நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு மேல், 8:00 மணிக்குள், அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கும்.