உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாகாளியம்மன் விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

கோட்டை மாகாளியம்மன் விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

பெருந்துறை: கோட்டை மாகாளியம்மன் கோவில், பொங்கல் விழாவை முன்னிட்டு, அலகு குத்தி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பெருந்துறை புது பஸ் ஸ்டாண்ட் அருகே, கோட்டை மாகாளியம்மன், மதுரை வீரன் கோவில் உள்ளது. இங்கு பொங்கல் விழா, மே, 23ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை, அலகு குத்துதல் மற்றும் பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அண்ணாசிலை விநாயகர் கோவிலில் தொடங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய சாலைகள் வழியாக, கோட்டை மாகாளியம்மன் கோவிலில் நிறைவடைந்தது. இதில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொங்கல் விழா, மஞ்சள் நீராட்டுதலுடன், இன்று நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !