சமையல் அறையில் பூஜையறை வைக்கும் வழக்கம் அந்தக் காலத்தில் இருந்தது ஏன்?
ADDED :3429 days ago
சமையல் என்பது ஒரு தவம். சமையலின் போது கவனம் சிதறி விட்டால், உப்பு. காரம் அதிகமாகியோ குறைந்தோ விடும். ருசி கெட்டுப்போகும். பக்தியிலும் தவத்திற்கே (தியானம்) முன்னுரிமை. தியானம் செய்யவும் ஒருமித்த மனம் வேண்டும். அதனால் தான், இரண்டையும் ஒரே இடத்தில் வைத்தார்கள். சமையலறை தெய்வத்தன்மை கொண்டது என்பதால், வீட்டுக்கு விலக்கான நாட்களில் பெண்களை சமைக்க அனுமதிக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல!காலையில் நீராடிய பிறகு அடுப்பு மெழுகி கோலமிட்டே சமைக்க ஆரம்பிப்பார்கள்.அப்போதெல்லாம் மண் அடுப்புகள் தான். கிராமங்களில் குடும்பமே உலகம் என்று வாழும் பெண்களை,பாவம் ஏதும் அறியாதவ! அடுப்படியே திருப்பதி என்றிருப்பவ! என்று பெருமையாகச் சொல்வர்.