உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீருத்ரம் சொல்லும் முறை

ஸ்ரீருத்ரம் சொல்லும் முறை

11 முறை ருத்ரம் சொல்வது, ஏகாதச ருத்ரம் எனப்படும். இதை 11 நபர்கள் ஒரு முறை சொல்வர். 121 முறை (11 நபர்கள் 11 முறை) சொல்வது, லகு ருத்ரம். லகு ருத்ரத்தை 11 முறை கூறினால், மஹா ருத்ரம். இந்த மஹாருத்ரத்தை 11 முறை பாராயணம் செய்வது, அதிருத்ரம். பொதுவாக கோயில்களில் 121 முறை ருத்ர பாராயணம் (லகுருத்ர பாராயணம்) செய்து, ருத்ராபிஷேகம் செய்வது வழக்கம். இது எல்லாக் கோயில்களிலும் நடக்கும். மஹாருத்ரம், அதிருத்ரம் போன்ற நிகழ்வுகள், எப்போதாவது ஏதேனும் பெரிய சிவஸ்தலங்களில் நடைபெறும். இவற்றை ஒரு நாளில் செய்ய முடியாது. நாள்கணக்கில் செய்ய வேண்டும். அபூர்வமாகத்தான் காண முடியும். உலக சாமதானம் மற்றும் உலக மக்களின் நன்மைக்காகவே இது நடத்தப்படுகிறது. அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று வாழ்வதுதான் இந்த லட்ச ருத்ர ஜபத்தின் நோக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !