உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோளீஸ்வரர் கோவிலில் 25ல் மகா கும்பாபிஷேகம்

சோளீஸ்வரர் கோவிலில் 25ல் மகா கும்பாபிஷேகம்

திருத்தணி : சோளீஸ்வரர் கோவிலின் மகா கும்பாபிஷேகம், இன்று காலை, கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. வரும், 25ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரர் கோவில், ஆற்காடுகுப்பம் கிராமத்தில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள், 4.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஏழு சன்னதிகளின் விமான கோபுரங்கள், கோவில் நுழைவு வாயில் கோபுரம் ஆகியவற்றிக்கு வண்ணம் தீட்டும் பணிகள் நடந்து முடிந்தன.இன்று காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் மகா கும்பாபிஷேக விழா துவங்குகிறது. இதற்காக கோவில் வளாகத்தில், ஐந்து யாக சாலைகள், 108 கலசங்கள் வைத்து, முதல்கால யாக பூஜை நடக்கிறது. நாளை இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில், மூன்றாம் கால யாக பூஜையும் நடக்கிறது.வரும், 25ம் தேதி காலை, 9:30 மணிக்கு கலசங்கள் ஊர்வலமும், தொடர்ந்து காலை, 10:30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், நண்பகல், 11:00 மணிக்கு மூலவருக்கு மஹா அபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் உற்சவர் வீதியுலாவும் ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !