மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
ADDED :3073 days ago
குளித்தலை: குளித்தலை அடுத்த, பிள்ளைகோடங்கிபட்டி முத்தாளம்மன் மற்றும் மகாமாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வருதல், பால்குட ஊர்வலம், தீர்த்தக்குட ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, கரகம் பாலித்தல், வாணவேடிக்கை, சுவாமி திருவீதி உலா, தீச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.