பழநியில் அங்காரஹப்பரிகார யாகம்
ADDED :3070 days ago
பழநி: பழநி ஆர்.வி.எஸ்., திருமணமகாலில் உலக நலன், அமைதிவேண்டியும், செவ்வாய் கிரக பாதிப்பு நீங்கவும் அங்காரஹப் பரிகார யாகபூஜை நடந்தது. சுவாமி அசோக்ஜி தலைமை வகித்தார். நடிகைகள் நிக்கி ஹல்ராணி, சிருஷ்டி டாங்கே, அஞ்சு ஆகியோர் விளக்கேற்றி யாகபூஜையை துவக்கி வைத்தனர். கணபதிபூஜை, அங்காரஹப் பரிகார மகா இயந்திரங்கள் வைத்து, உலகநலன், செவ்வாய் கிரக பாதிப்பு நீங்கவேண்டி யாகபூஜைகள் நடந்தது. பழநிகோயில் இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் நகரமுக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.