உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ‘தினமலர்’ செய்தி எதிரொலி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளத்திற்கு விமோசனம்

‘தினமலர்’ செய்தி எதிரொலி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளத்திற்கு விமோசனம்

சென்னை: நமது நாளிதழ் செய்தியின் நடவடிக்கையாக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளம் சீரமைப்பு பணி துவங்கியது. திருவல்லிக்கேணியில் அமைந்துள்­ளது பார்த்தசாரதி பெருமாள் கோவில். 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்கும் இக் கோவிலின் குளம், பல ஆண்டுகளாக முறையாக சீரமைக்கப்படவில்லை. சமீப காலமாக,மழை நீர் வடிகால் மூலம், கழிவுநீர் குளத்தில் சங்கமித்தது. இது குறித்து, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளிவந்தது. இதை யடுத்து, அறநிலையத்துறை சார்பில், குளம் சீரமைக்கும் பணி துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !