உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநிகோயிலில் 266 பக்தர்கள் தங்கரதம் இழுத்து வழிபாடு

பழநிகோயிலில் 266 பக்தர்கள் தங்கரதம் இழுத்து வழிபாடு

பழநி: ஞாயிறுவிடுமுறைதினத்தில் பழநி முருகன்கோயிலில் நேற்று ஒரே நாளில் 266 பேர் தங்கரதம் இழுத்து வழிபாடு செய்தனர். பழநி முருகன் மலைக்கோயிலில் தினமும் இரவு 7:00 மணிக்கு தங்கரதப்புறப்பாடு நடக்கிறது. பக்தர்கள் தங்கரதம் இழுக்க ரூ.2000 கட்டணமாக அன்று மாலை 5 மணி வரை செலுத்தலாம். மூன்று நாட்களுக்கு முன் இணையதளத்தின் முன்பதிவுசெய்யவேண்டும். தங்கரதம் இழுக்க 3 பேரும், சிறப்பு தரிசனத்திற்கு 5பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். இதுபோக பஞ்சாமிர்தம், காமாட்சி விளக்கு, தேங்காய் பழம், முருகன்படம், துணிபை பிரசாதமாக வழங்கப்படுகிறது. தங்கரத சாதனை: ஒரு நாளைக்கு எத்தனை பக்தர்கள் பணம் கட்டியிருந்தாலும், 10உலா நிலைகளிலும் பதிவு நேரத்தின் அடிப்படையில் பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தங்கரதம் ஒரே ஒரு முறை மட்டுமே வெளிப்பிரகாத்தில் உலா வருவது சிறப்பாகும். இதில் விழாக்காலங்களில் 150க்கும்மேற்பட்டவர்களும், சாதாரண நாட்களில் 50 முதல் 100பேர் தங்கரதம் இழுக்கின்றனர். நேற்று ஒரேநாளில் அதிகபட்சமாக 266பேர் தங்கரதம் இழுத்து சுவாமிதரிசனம் செய்தனர். இது வழக்கத்தை விட இருமடங்கு அதிகம் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !