இயேசு சொன்ன கதை
மனிதன் பணிவுடன் இருக்க வேண்டும் என் பதை வலி யு றுத்தி இயேசு சொன்ன கதை. இருவர் ஆலயத் திற்கு வந்தனர். அவர்களில் ஒருவன், கடவுளே! நான் இதோ என் அருகில் இருப்பவன் போல் பாவம் செய்தவன் அல்ல, நான் அநியாயம் செய்த தில்லை. பிறர் பொருளைப் பறித்தவனில்லை, நான் பெண்களை ஏறிட்டுப் பார்த்ததில்லை. வாரத்தில் இரண்டு நாள் நான் உபவாசம் இருக்கிறேன். என் சம்பாத் தியத்தில் பத்தில் ஒரு பாகத்தை ஆலயத்திற்கு செலுத்தி வருகிறேன். என் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளும் கர்த் தாவே, என்றான். அருகில் இருந்தவனோ, தேவனே! நான் பாவம் செய்தவன். என்னை மன்னியும், இந்தப்பாவியின் மீது அன்பு காட்டும்,என்று உருக்க மாகப் பிரார்த்தித்தான். முன்னவன் தான் செய்ததை எல்லாம், கடவுளிடம் வெளிச்சம் போட்டுக் காட்டினான். பின்னவனோ தன் பாவங்களைக் கடவு ளிடம் ஒப்புக் கொண்டான். இந்த இருவரில் பின்னவனே நீதிமான். ஏனெனில் அவன் தன் குற் றத்தை ஒப்புக் கொண்டு தன்னைத் தாழ்த்திக் கொண்டான். முன் னவனோ, தான் செய்ததை எல்லாம் சொல்லிக் காட்டி தன்னைத் தானே உயர்த்திக் கொண்டான். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த் தப்படுவான். தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த் தப்படுவான், என்றார்.