மணவாள மாமுனிகள்!
ADDED :3422 days ago
மணவாள மாமுனிகள் வைணவ ஆசார்யர்களில் ஒருவர். இந்த ஸ்வாமி ஐப்பசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் திருவதரித்தார். அனந்தாழ்வானுடைய அம்சம் ஆவார். ஸ்ரீபகவத் இராமாநுஜருடைய ஆயுட்காலம் 200 ஆக இருக்க, அந்த ஸ்வாமிகள் 120 திருநட்சத்திரம் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்து, மீதமுள்ள 80 திருநட்சத்திரங்கள் மணவாள மாமுனிகளாக திருவவதரித்து பூர்த்தி பண்ணினார் என்பர் பெரியோர். ஸ்ரீபகவத் ராமாநுஜர் வடமொழியில் மட்டுமே நூட்களை இயற்ற, தமிழ் மொழியில் நூட்களை படைக்காத குறை தீர, அனேக நூட்களை தமிழிலேயே இயற்றினார் இம்மணவாள மாமுனிகள். இம்மணவாள மாமுனிகளுக்கு அஷ்டதிக் கஜங்கள் என்று சொல்லக்கூடிய எட்டு பேர் சீடர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரே திருவேங்கடமுடையான் சுப்ரபாதம் இயற்றிய பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி ஆவார்.