சோழபுரம் அருள்மொழிநாத சுவாமி கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :3068 days ago
சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரம் அறம்வளர்த்த அம்பாள் சமேத அருள்மொழிநாத சுவாமி கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சிவகங்கை அருகே சோழபுரத்தில் பழமையான அறம்வளர்த்த நாயகி அம்பாள், அருள்மொழிநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் ஆனித்திருவிழா காலை கொடியேற்றம், காப்பு கட்டுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, தினமும் சுவாமி, அம்பாள் காலை, மாலையில் வீதி உலா வருவார். விழாவில் அருள்மொழிநாதர் பிரியாவிடை, மற்றும் அறம்வளர்த்த அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.