உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்கள் வாசற்படியில் அமர்ந்து கூந்தல் வாரக் கூடாது என்பது ஏன்?

பெண்கள் வாசற்படியில் அமர்ந்து கூந்தல் வாரக் கூடாது என்பது ஏன்?

பெண்கள் வாசற்படியில் அமர்ந்து கூந்தல் வாரக் கூடாது என்பது மட்டுமல்ல; வாசற் படியில் யாருமே அமரக் கூடாது. வாசல் என்பது வெளிப்பக்கம், உள் பக்கம் என்று இரண்டுமில்லாத நிலை. பிரகலாதனின் தந்தை ஹிரண்யகசிபு, பிரம்மாவிடம் வரம் கேட்டபோது, எனக்கு மரணம் என்பது ஆகாசத்திலும், பூமியிலும் கூடாது. பகலிலும், இரவிலும் கூடாது. உள்ளேயும் வெளியேயும் கூடாது, உயிருள்ளதாலும், உயிரற்றதாலும் கூடாது, மனிதனாலும், மிருகத்தாலும் கூடாது என்று சாமர்த்தியமாகக் கேட்டான். பகவான் நரசிம்ம அதவதாரம் செய்தபோது, மனிதனும் விலங்கும் அல்லாத ரூபத்தில், பகலும், இரவும் அல்லாத சந்தியா காலத்தில், உள்ளும், புறமும் அல்லாத வாசல் நிலைப்படியில், ஆகாயத்திலும், பூமியிலும் அல்லாத நிலையான தமது மடியில் உயிருள்ளதும், உயிரற்றதுமான தமது கை நகம் கொண்டு ஹிரண்யகசிபுவை சம்ஹாரம் செய்தார். ஆகவே, வாசற்படி என்பது, இரண்டுமில்லாத நிலை. அது உள்புறமும் இல்லை; வெளிப்புறமும் இல்லை என்பதால் அங்கே அமர்ந்து கூந்தல் வாரக் கூடாது என்பது மட்டுமில்லை, அங்கே அமரவே கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !