குப்பம்பட்டியில் நாகர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :3064 days ago
ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம் அருகே, குப்பம்பட்டியில், நாகர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. ஜலகண்டாபுரத்தை அடுத்த, சூரப்பள்ளி பஞ்சாயத்து குப்பம்பட்டியில் உள்ள, நாகர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, தீர்த்தக்குட ஊர்வலத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து முதல்கால யாகபூஜை, இரண்டாம்கால யாக பூஜையும் நடந்தது. நேற்று காலை, நாகர் சுவாமிக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.