உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வருகிறாள் வரலட்சுமி

வருகிறாள் வரலட்சுமி

ஆடி பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் (ஆக.4) சுமங்கலிகள் மாங்கல்ய பலம் பெற இருப்பது வரலட்சுமி விரதம். பூஜையறையில் சிறு மண்டபம் அமைத்து வரலட்சுமியின் முக பிம்பம் அல்லது சிலைக்கு தாழம்பூ, மஞ்சள் ஆடையால் அலங்காரம் செய்ய வேண்டும். வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதன் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள் ஆகியவற்றை வைக்க வேண்டும். ஒரு குடத்தில் நீர் நிரப்பி, சந்தனம் குங்குமம் இட்டு, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைத்து,  கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல் படைத்து அஷ்டலட்சுமி வருகை பதிகம், லட்சுமி ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.  பூஜையில் வைத்த நோன்புக் கயிறை வலது கையில் அணிய வேண்டும். கன்னிப் பெண்கள் வழிபட்டால் மணவாழ்வு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !