உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையில் மகாதேவ அஷ்டமி!

நெல்லையில் மகாதேவ அஷ்டமி!

திருநெல்வேலி : மகாதேவ அஷ்டமியை முன்னிட்டு வண்ணார்பேட்டை பாரதி தீர்த்த மையத்தில் இன்று (18ம் தேதி) சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வண்ணார்பேட்டையில் மகாதேவ அஷ்டமியை முன்னிட்டு பாரதி தீர்த்த மையம் கோகுலம் கட்டடத்தில் காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள், விஷேச வழிபாடு நடக்கிறது. நெல்லை டவுன் சொக்கலிங்கம் பிள்ளை திருமண மண்டபத்தில் மகாதேவ அஷ்டமியை முன்னிட்டு காலை 9 மணிக்கு சிறப்பு பூஜை, விநாயகர் சன்னதியில் பூஜை, சிவ பூஜை மற்றும் வழிபாடுகள், அன்னதானம் நடக்கிறது. பாளை., கொட்டாரம் அக்ரஹாரத்தில் காலை 9 மணி முதல் சிவனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்கார தீபாரானை, அன்னதானம் நடக்கிறது. பாளை., பெருமாள் கீழரதவீதி சீனிவாச மகாலில் மகாதேவ அஷ்டமியை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமசுப்பிரமணியன், மகாதேவன் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !