உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தரித்திரத்தை தவிர்க்க

தரித்திரத்தை தவிர்க்க

1. ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசற்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.
2. வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளின் மீது உட்காரகூடாது.
3. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்கக் கூடாது.
4. வெற்றிலை, வாழையிலை இவைகளை வாட விடக் கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக் கூடாது.
5. சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.
6. குத்து விளக்கை தானாக அணையவும் விடக்கூடாது. ஊதியும் அணைக்கக் கூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.
7. வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக் கூடாது. எழவு என்றும் கூறக் கூடாது.
8. அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக் கூடாது.
9. துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.
10. உப்பைத் தரையில் சிந்தக் கூடாது. அரிசியை கழுவும்போது தரையில் சிந்தக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !