உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவுடையம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

திருவுடையம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

மீஞ்சூர் : திருவுடையம்மன் திருணமங்கீஸ்வர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது. மீஞ்சூர் அடுத்த, மேலுார் கிராமத்தில், திருவுடையம்மன் உடனுறை திருமணங்கீஸ்வரர் கோவில் உள்ளது. 1983ம் ஆண்டிற்கு பின், கோவில் மராமத்து பணிகள் செய்து, விழா நடைபெறாமல் இருந்தது. தற்போது, கோவில் வழிபாட்டு குழு மற்றும் உபயதாரர்கள் மூலம், 50 லட்சம் ரூபாயில் கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து, நேற்று, காலை, 11:00 மணிக்கு குடமுழக்கு விழா வெகு விமரிசையாக நடந்தது. கடந்த, 1ம் தேதி முதல், கிராம தேவதை வழிபாடு, மஹா கணபதி ஹோமம், கோபூஜை, சாந்தி ஹோமம், இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, தத்வார்ச்சனை ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வந்தன. நேற்று, காலை, 7:30 மணிக்கு விநாயகர் பிராத்தனை, 9:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, ஆகியவை நடந்தன. 10:45 மணிக்கு கலசங்கங்கள் ஆலயம் வலம் வந்து, விமான கோபுரங்களின் மீது புனித நீர் ஊாற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, 12:00 மணிக்கு மஹா அபிஷேகமும், தீபாரதனையும் நடைபெற்றன. பொன்னேரி டி.எஸ்.பி., கண்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் ஒலிபெருக்கி மூலம், பக்தர்களை உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்படியும், சந்தேக நபர்கள் குறித்து தெரிவிக்கும்படியும் எச்சரிக்கை செய்தபடி இருந்தார். 33 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில், நுாற்றுக்கணக்கன பக்தர்கள் திரளாக பங்கேற்று, திருவுடையம்மனையும், திருமணங்கீஸ்வரரையும் நெஞ்சுருக வணங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !