முறையூர் சொக்கநாதர் கோயில் தேரோட்டம்
ADDED :3027 days ago
சிங்கம்புணரி, சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித் தேரோட்டம் நேற்று நடந்தது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் ஆனித்திருவிழா ஜூன் 28 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 5:00 மணிக்கு கிராமத்தார்கள் முன்னிலையில் சுவாமி கோயிலில் இருந்து திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பிரியாவிடை அம்மனுடன் சொக்கநாதர் பெரிய தேரிலும், மீனாட்சியம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். 5:30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. நான்கு ரத வீதிகளில் 2 தேர்களும் பவனி வந்தது. தேருக்கு முன்பாக பக்தர்கள் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 6:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை முறையூர் கிராமத்தார்கள் செய்திருந்தனர். 10 ம் திருவிழாவான இன்று தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.