உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / களிமண், நெல் உமியில் உருவாகும் சாமி சிலைகள்

களிமண், நெல் உமியில் உருவாகும் சாமி சிலைகள்

பாலமேடு: பாலமேடு அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழாவை முன்னிட்டு, மறவபட்டியில் களிமண் சிலைகள் தயாராகி வருகின்றன. பாலமேடு வடக்குதெரு பொது மகாசபையினரால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குதிரை எடுப்பு விழா நடத்தப்படுகிறது. ஆக., 4ம் தேதி  நடக்கும் விழாவிற்காக மறவபட்டியில் களிமண், நெல் உமி கலந்து அய்யனார், கன்னிமார் உட்பட குதிரை சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. இவை நீரில் கரையாது. சிலை செய்யும் பூஜாரிகள் சிலை செய்து, அதை கிராமத்தினரிடம் ஒப்படைத்து கோயில் விழா முடியும் வரை விரதம் இருக்கின்றனர். பூஜாரி அழகுமணி கூறியதாவது: பரம்பரை பரம்பரையாக விரதமிருந்து சுவாமி சிலைகள் செய்து வருகிறோம். அறுவடை செய்த நெல்லை முறத்தால் வீசி தரம்பிரிக்கும் போது கிடைக்கும் நெல் உமி, சாமி சிலை செய்ய உகந்தது.  இரண்டு ஆண்டுகளாகநெல் விளைச்சல் இல்லாததால் உமி கிடைக்கவில்லை. வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி சிலை செய்கிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !