உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேதுக்கரை பெருமாள் கோயில் அர்த்த மண்டபம் சேதம்

சேதுக்கரை பெருமாள் கோயில் அர்த்த மண்டபம் சேதம்

கீழக்கரை: திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடற்கரைக்கு செல்லும் வழியில் சின்னக்கோயில் என்றழைக்கப்படும் ஏகாந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் உள்ளது.  கோயிலின் அர்த்த மண்டபம் மற்றும் பிரகாரப்பகுதி சேதமடைந்து, கீழே இடிந்து கிடக்கிறது. பழமையும், புராதன சிறப்பினை கொண்ட இக்கோயில் இருக்கும் இடம்  புதர் மண்டி காணப்படுகிறது. விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறையுடன் இணைந்து ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் பூர்வாங்கப் பணிகளை தொடங்கி, கும்பாபிஷேகத்திற்கு வழிகாணும் முயற்சியை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !