உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலக்கட்டு கருப்பசாமி கோயில் வருஷாபிஷேகம்

வலக்கட்டு கருப்பசாமி கோயில் வருஷாபிஷேகம்

ராஜபாளையம்: ராஜபாளையம் சத்திரிய ராஜூக்கள் சிந்தலப்பாடி தாயாதியர்கள் பொது பண்டிற்கு பாத்தியப்பட்ட  ஸ்ரீவலக்கட்டு கருப்பசாமி கோயில் வருஷாபிஷேகம் நடந்தது.  நிகழ்ச்சியை முன்னிட்டு  அதிகாலை 5:00 மணி முதல் 11 வகையான சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம்  நடைபெற்றது. பகல் 11:00 மணிக்கு யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து சுவாமி  பக்தர்களுக்கு காட்சியளித்தார். ராம்கோ சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா சிறப்பு  விருந்தினராக கலந்து கொண்டார். ராஜூக்கள் கல்லுாரி ஆட்சி மன்ற குழு தலைவர் சந்திரசேகர ராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை பொது  பண்டு தலைவர் ராமச்சந்திர ராஜா செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !