பழநி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :3149 days ago
பழநி, பழநி சிவன் கோயில்களில் சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பழநி பெரியாவுடையார் கோயிலில் மாலை 4.30 மணிக்கு நந்திபகவான், மூலவருக்கும் பிரதோஷ வேளையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிவன் பார்வதி ரிஷப வாகனத்தில் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். இடும்பன்கோயிலில் ரிஷபவாகனத்தில் உள்ள சிவகிரிநாதர், உமா மகேஸ்வரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி திருவுலா நடந்தது. மலைக்கோயில், பெரியநாயகியம்மன்கோயில், கைலாசநாதர், சன்னதிவீதி வேளீஸ்வரர்கோயில், புதுநகர் சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.