திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா
ADDED :3349 days ago
திருவாடானை, திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. நந்திபகவான் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேகங்கள் நடந்தன. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயாருக்கு சிறப்பு தீப, ஆராதனைகளும், சுவாமி வீதி உலாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.