சொக்கநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு
ADDED :3009 days ago
மேட்டூர்: மீனாட்சி சொக்கநாதர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேட்டூர், மேற்கு பிரதான சாலையில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மீனாட்சி சொக்கநாதர் கோவில் உள்ளது. அதற்கு, 1990 பிப்., 15ல் கும்பாபிஷேகம் நடந்தது. 26 ஆண்டுகளாக, கோவிலில் புனரமைப்பு பணி நடக்கவில்லை. இந்நிலையில், புனரமைப்பு பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்த, நகராட்சி முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், சொக்கநாதர் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. அதில், வரும், 22ல் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். அதில், புனரமைப்பு பணி மேற்கொள்வதற்காக, கமிட்டி நிர்வாகிகளை தேர்வு செய்து கும்பாபிஷேகம் நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஆன்மிக குழு நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.