உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி கவீஸ்வரன் கோவிலில் வருஷாபிஷேக ஹோமம்

கிருஷ்ணகிரி கவீஸ்வரன் கோவிலில் வருஷாபிஷேக ஹோமம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை கவீஸ்வரன் கோவிலில், வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு யாகம் நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை சித்தர் குகை கோவில் கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து, ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, நேற்று முன்தினம் வருஷாபிஷேகம் துவங்கியது. இதையொட்டி, நேற்று முன்தினம் கோ பூஜை, வருண பூஜை, மஹா கணபதி பூஜை, புண்யாவாஹனம், அஷ்டதிக் பாலகர் பூஜை, நவக்கிரஹ பூஜை, பிரதான கலச பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை, 8:30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ருத்ரஹோமம், துர்கா ஹோமம், மஹா பூர்ணாஹுதி நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !