ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உதவிகள்
ADDED :3022 days ago
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் சித்தர் பீடத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.மேல்மருவத்துார் சித்தர் பீடத்தின் சார்பாக, கோபால் நாயக்கர், 18ம் ஆண்டு நினைவு நாள் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கோபால் நாயக்கர் கல்வி அறக்கட்டளையின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.ஆதிபராசக்தி ஆன்மிக தொண்டு இயக்கத்தின் தலைவர், கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமார் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.